(கோவில் வரலாறு) Temple History
தெலுங்குபட்டி மக்கடவர் குல ஸ்தல வரலாறு
ஸ்ரீரங்கநாதரின் உடன்பிறந்த தங்கைகள் நம் குல தெய்வம் ஸ்ரீ பாலாயம் மன் ஸ்ரீ பாப்பாயம் மான் எனவும், தங்கைகள் தன் அண்ணல் அரங்கரிடம் பட்டுச் சேலை, காதோலை கருகமணி கேட்டதாகவும் அண்ணல் அரங்கர் ஆதிகேசன் மீது அனந்தசயனம் கொண்டிருந்ததால் சரிவர செவிமடுக்கவில்லை. தங் கைகள் தாங்கள் கேட்டதை அண்ணல் செவி மடுக்காததால் கோபித்துக் கொண்டு அம்மாமண்டபம் வந்து அங்கிருந்து காவிரிக்கரை வழியே தெலுங்குபட்டி வந்தடைந்தபோழ்து ஸ்ரீ ரங்கர் ஞானத்தில் தங்கைகள் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேறியதும், தற்போது தெலுங்குபட்டியில் இருப்பதையும் உணர்ந்து தங்கைகள் கேட்ட பட்டுத்சேலை காதோலை கருகமணியும் வாங்கியதோடு ஒரு சாட்டையும் வாங்கி ஒரு பேழையில் வைத்து எடுத்துக் கொண்டு (அண்ணல் மீது தங் கையர்களுக்கு கோபமிருந்தால் இந்த சாட்டையால் அடிக்கலாம் என்று சமாதானப்படுத்த சாட்டையும் வாங்கினார்)
தெலுங்குப்பட்டியில் தங்கையர் இருக்குமிடம் வந்து பேழையை இறக்கி வைத்தார். பேழையுடன் வந்த அண்ணலைக் கண்ட சகோதரிகள் மீண்டும் கோபித்துக் கொண்டு ஜோதி அரங்கம் இருக்குமிடம் வரை சென்றதாகவும், அங்கு அரங்கரும் ஆதிசேசனும் தங்கையர்களை தடுத்தாட்கொண்டு சமாதானம் செய்து மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கு அழைத்த போது அண்ணல் அரங்கரிடம் சகோதரிகள் (ஸ்ரீபாலாயி ஸ்ரியாப்பாயி) நாங்கள் இங்கு வந்து தங்கியபோது ஆதரவளித்து சீராட்டிய மக்களோடு தாங்களும் இகேயே இருப்பதற்கு விரும்புவதாகவும் வேண்டிய போது, ஸ்ரீரங்கர் தங் கைகளைப் பார்த்து இந்த – மக்களைவிட்டுக் கடந்து வர விருப்பமில்லை எனவும் சொல்லும் வண்ணம் உங்களை உபசரித்த இந்த மக்களை மக்கடவர் என்றும் மக்களார்ந்த தெலுங்க பட்டியில் உரிய நேரத்தில் உரிய இடத்தில் உரியவர்களால் உங்களுக்குத் திருக்கோவில் எழுந்தருளும் என்று உபதேசித்தார்.
அரங்கரோடு இணைவந்த ஆதிசேசன் தன்வழித் தோன்றலாம் ஐந்து தலை நாகம் ஒன்று உங்களுக்கு அரியணையாய் இருக்கும் என்று உடன் உபதேசித்தார். அவ்வண்ணமே ஸ்ரீரங்க மக்கடவர் குலத் திருக்கோவிலாம் ஸ்ரீபாலாயம் மன் ஸ்ரீ பாப்பாயம் மன் திருக்கோவில் எழிலோடும் பொலிவோடும் உருவாகி உள்ளதாக உணர்வோம். ஸ்ரீரங் கரை முதலில் தரிசித்த பின்னரே நமது குல தெய்வங்களை வந்து வழிபடுவது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. ஸ்ரீரங்கநாதருக்கு அணையாகவும் நமது குலதெய்வங்களுக்கு அரியணையாகவும் ஐந்து தலைநாகம் உள்ளது.
படளை :
புரட்டாசி மாதத்தில் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை நமது குல பங்காளிகள் சார்பாக பூஜை பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்றது.
குறிப்பு :
ஸ்ரீரங்கத்திற்கும் நமது குல தெய்வங்களுக்கும் உள்ள பந்தமே நாம் “ஸ்ரீரங்க மக்கடவர்” குலம் என்று அழைக்கப்படுகிறோம்.
கோயில் அமைந்த வரலாறு
பல ஆண்டுகளுக்கு முன்பாக நம் குலப் பெருமக்களின் கோயில் இருந்த இடம் தெரியாமல்
இருந்த நேரத்தில் நம் முன்னோர்கள் பெருமுயற்சியால் நம் ஸ்ரீரங்கத்து மக்கடவர் குலமக்கள் கோவில் ஒரு பழைய வீடாகவும் அந்த வீட்டினுள் ஒரு பேழைக்குள் குலதெய்வசாமி குடியிருப்பதாகவும் அறிந்து கொண்டு எல்லாப் பங்காளிகட்கும் தெரியப்படுத்தி புரட்டாசி சனிக்கிழமைகளில் பேழையை வெளியே எடுத்து அதற்குப் பூஜை புனஸ்காரங்கள்
செய்து பொங்கல் படைத்து உள்ளூரில் (தெலுங்குப் பட்டியில்) இருக்கும் நம் பங்காளிகளை அழைத்து ஒற்றுமையாக சாமி கும்பிட்டுக் கொண்டு வரும் நிலையில், சுவாமிக்கு ஒரு கோவில் அமைக்கலாம் என்று எண்ணினார்கள். அந்த சமயம் அந்த எண்ணம் ஈடேறவில்லை. பின்னர் வேட்டைக்காரன்புதூர் அவர்களும், மூக்குத்தரிச்சாம்பாளையம் M.G.V. பாலகோபால்
M. கோவிந்தராஜ் அவர்களும் சென்னை R.M.R. திருப்பதி மற்றும் உள்ளூர் பங்காளிகளும் சேர்ந்து கோவில் அமைக்கலாம் என்ற எண்ணத் தில் தெலுங்குபட்டியில் இடம் வாங்க முடிவு செய்தார்கள். அதற்கு உள்ளூர்ப் பங்காளிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அது தள்ளிப் போனது.
அதன் பின்னர் மேற்கண்ட மூவரின் பெருமுயற்சியால் உள்ளூரிலே ஊர் மையத்தில் 1992-ல் ஒரு இடம் வாங்கப்பட்டது. அந்த இடத்தில் கோவில் அமைக்கலாம் என்று அனைத்து பங்காளிகளாலும் முடிவு செய்யப்பட்டது. அம் மூவரும் அதற்காக பெருமுயற்சி செய்து நம் குலப் பங்காளிகளின் துணை கொண்டு மூன்று வருட காலத்தில் ஆலயம் அமைக்கப் பட்டது. பின்னர் 1996-ல் கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை மாமல்லபுரம் சென்று ஆன்மீக சிற்பிகளின் ஆலோசனைப்படி ஆகமரீதியாக ஐந்து தலை நாகம் அரியணையாக நமது குலதெய்வங்கள் ஸ்ரீபாலாயம் மன், ஸ்ரீபாப்பாயம் மன் அமர்ந்திருக்கும் நிலையில் திருவுருவச்சிலை வடிவமைக்கப் பட்டது. 1996-ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக பெரியகும் பிடும் கும்பாபிஷேகமும் ஒன்றாக திருவாரூர் திருப்பதி செட்டியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த பன்னீராண்டுகளிலும் சனிக்கிழமைகளில் நமது பங்காளிகள் அனைவரும் கூடி (வெள்ளி, சனி, ஞாயிறு) மிக விமரிசையாகக் கொண்டாடி வந்துள்ளோம். இரண்டாவது
கும்பாபிஷேகம் 2007-ல் ஐப்பசி மாதத்தில் 5,6,7 ஆகிய தேதிகளில் மிகவும் சிறப்பாக பெங்களூர் G.R. இராஜகோபால் அவர்களின் தலைமையில் நமது பங்காளிகள் அனைவரின் துணை கொண்டு மிகுந்து சீரும் சிறப்புடன் நடைபெறுகின்றது.
கோவில் அமைப்பு கொண்டிருக்கும் மூலஸ்தானம் ஸ்ரீரங்கம் மக்கடவர் குலமாகிய நமது குலதெய்வங்கள் குடி ஸ்ரீபாலாயம் மன், ஸ்ரீபாப்பாயம் மன் கோவில் கருவறை என்னும் தென்தமிழ் நாட்டிலுள்ள கோவில்களில் உள்ளதைப் போல் சதுரவடிவிலும் வெளிப் பிரகாரங்கள் வடநாட்டுக் கோவில்களில் உள்ளது போல் வட்டவடிவ அமைப்பிலும் அமைந்துள்ளது. எந்நாட்டவரும் போற்றிவணங்கும் கலைக்கோவிலாக விளங்குகிறது. ஆன்மீக ஆய்வில் அகழ்ந்து நமக்குக் கிடைத்த யோகா, தியானம் போன்ற மனித ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத பயிற்சிகளை நமக்குத் தந்த யோகிகளும், பீடாதிபதிகளும் கட்டியுள்ள பலகோவில்கள் நமது கோவிலில் சாயல்களே! திருவண்ணாமலை அருகில் தென்னங் கூர் என்னும் ஊரில் ஸ்ரீசாரதா பீடத்தால் பெரும்
பொருட் செலவிலும், கலை நயத்தோடும் உருவாக்கி பராமரித்து வரும் ஸ்ரீகிருஷ்ணரின்
திருக்கோவிலும் நமது கோவிலின் சாயலே.
சமீபத்தில் வேலூருக்கு அருகில் ஸ்ரீநாராயண பீடத்தால் பலகோடி ரூபாய் மதிப்பில் தங்கத்தால் ஆன ஸ்ரீபெருமாளின் திருக்கோவிலும் நமது கோவிலின் சாயலே. கோயிலுக்கு முன்புறம் நல்ல விஸ்தீரமான இடம் இருப்பதால் ஜன நெருக்கடியில்லாமலும், நிலமட்டத்திலிருந்து நல்ல உயரத்தில் மூலஸ்தானம் அமைந்திருப்பதால் எங்கிருந்து பார்த்தாலும் தடையின்றி பல பேர் தரிசிக்கும் வண்ணம் உள்ளது. வெளிப் பிரகாரங்கள் வட்டவடிவில் தடுப்புச் சுவர்கள் இல்லாததால் இயற்கையாகவே நல்ல காற்றும் வெளிச்சமும் கிடைக்கிறது. நமது குல தெய்வங்களின் மூலவிக்கிரகம்
பிரமாண்டவடிவில் காட்சி தருவதால் எல்லோரும் சுவாமிகளையும் பூஜைகளையும் தெளிவாகக் காணமுடிகிறது.
நமது செட்டியார் சமூகத்தில் குலங் களின் பெயர்களால் இருபத்து நான்கு பிரிவுகள் உள்ளது அனைவரின் குலங்களையும் குறிப் பிடும் வண்ணம் கோவிலுக்குள் இருபத்து நான்கு தூண்கள் அமைத்து ஒவ்வொரு தூணிலும் ஒரு குலத்தின் பெயரை கல்வெட்டில் பதித்து வைத்துள்ளோம். அதில் நமக்கு அண்ணன் தம்பி முறையான எட்டு வீட்டுக் குலங்களின் பெயர்களை முதல் வட்டத்திலுள்ள எட்டுத் தூண்களிலும், நமக்கு மாமன், மைத்துனர் உறவு
முறையான பதினாறு வீட்டுக்குலங்களின் பெயர்களை வெளிவட்டத்திலிருக்கும் பதினாறு தூண்களிலும் அழகுற பாங்குடன் பதித்து வைத்துள்ளோம். அந்த அமைப்பில் வேறு எந்தக் குலதெய்வக் கோயில்களிலும் இல்லாத சிறப்பு அமைப்பாகும்.
ஸ்தல வரலாறு
கோவில் முகப்பின் மேலே ஸ்ரீரங்கநாதர் சயனித்திருக்கும் தோற்றமும், மூலஸ்தான முகப் பின் மேலே கெஜலட்சுமியின் தோற்றமும் கோவிலுக்கு நிறைவானதாகவும் ஸ்ரீரங்கமக்கடவர் குலமாகிய நமக்கு எல்லா செல்வங்களும் கிடைக்குமென்னும் இறைத்தத்துவமாகவும் விளங்குகிறது.
முதல் தெய்வமாம் வினாயகரும், வைணவத்தில் சிறப்பான இடத்தில் இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர்.
ஸ்ரீவிஷ்ணு துர்க்கையும் செட்டியார் சமூகம் வாழும் ஊர்களில் பிரதான தெய்வமான ஸ்ரீகாமாட்சியம்மனும் அரவ அதியணையில் அமர்ந்து அரங்கத்து மக்கடவர் அகத்தில் அருளாட்சி புரியும் ஸ்ரீ பாலாயம்மன், பாப்பாயம் மன் ஆகிய மூர்த்திகளும் பொருத்தமாக அமைந்து திருக்கோவிலுக்கு வந்து வணங்கியவர்களின் உள்ளத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளது. நமக்குப் பெருமையே ஸ்ரீரங்க மக்கடவர் குலமாகிய நமக்கு இத்திருக்கோவில் அமைந்தது நமக்கு கிடைத்த மிகப் பெரும் பாக்கியமே!
History of Telugupatti Makkadavar Kula Birth Place
Sriranganatha’s siblings are our clan deity Sri Paalayamman Sri Paappayamman.The sisters asked their brother for a silk saree and Katholai Karugamani but brother sriranganatha did not listen as he had ananthasayanam on Adishesan.Sri Paalayamman Sri Paappayamman was angry because their brother did not listen to what they said so they went to Telugupatti . With his wisdom Sri Rangar came to know about the reason of his angry sisters and he came to Telugupatti from there via Kavirikarai to convince his sisters.Sriranganatha bought a silk saree and a whip bought and put in an ark and took (if his sisters were angry they could beat him with this whip). He came to his sister’s place at Telugupatti and unloaded the ark. Sisters are not convinced after seeing their brother. Then Arangar and Adishesan stopped the sisters and made peace. when they are convinced and invited back to Srirangam the sisters refused to go and said “When we came and stayed here, we were with the people who supported us when we wanted to be here”, and also asked Srirangar not to leave people these people are called Makkadavar and stay there in the right place at the right time in the popular Telugu community. Because the people deserve it.
One of the five-headed serpents that may appear on the spur of the moment is Adiseson, who joined the arena he preached with you that you will be on the throne. Similarly Sriranga Makkadavar Kulath Thirukovilam Sripaalayammaan Sri Paappayamman Thirukovil with elegance and splendor we will feel evolved. It was only after the first visit to the shores of Srirangam that the worship of our tribal deities began is customary. Dam to Sriranganatha and throne to our deities.
History of the temple
Not knowing the location of the temple of our clan greats many years ago with great effort our Srirangam Makkadavar Kulamakkal temple became an old house and inside that house knowing that Kuladeyvasamy lives in an ark, all the partners will pass inform and take out the ark on Purattasi Saturdays and offer prayers for it make Pongal and invite our local (Telugu community) partners and thought of building temple for Swami. It didn’t happened at that time.
Then Vettaikaranputhur with Mr. M.G.V. Balagopal,Mr. M Govindaraj andwith Mr. R.M.R Tirupati Chennai and local partners thought that the temple could be built together did decided to buy a place in Telugupatti. Due to the local partners disagreement it was postponed.
After that, due to the efforts of the above three in 1992 in the local town center the land was purchased. With the acceptance of all the partners the temple can be set up at that place was finally decided. All three were working hard for that and are the support of our clan partners the temple was built in three years. Then in 1996 the consecration was arranged. Appropriate arrangements go to Mamallapuram and follow the To get the spiritual advice of sculptors on the throne are our deities Sripalayam Man and Sripaapayamman sitting the statue was designed. 1996 will be a year of great growth Kumbabhishekam was held together with Thiruvarur Tirupati Chettiar. All of our partners on Saturdays for the past twelve years since then gathered (Friday, Saturday, Sunday) we have been celebrating very critically. Second Bangalore on the 5th, 6th and 7th of the month of Kumbabhishekam 2007 in the month of Ipasi G.R. Rajagopal with the support of all our partners under their leadership.
Temple Architecture:
Mulasthanam: Our deities who belong to the Srirangam Makkadavar clan.
karuavarai: Exterior squares are designed in temples as in South Tamil Nadu Temples and pragaras are built in a circular pattern as in the north Indian temples.It is a place of worship for my countrymen.
Worship places of Practices for Human excellence like yoga and meditation that we have found by digging into spiritual study was built in similar fashion like this temple.The many temples that have been built are shades in our temple!
The Sreesaratha Peetha is located in the town of Tennangur near Thiruvannamalai is also similar to the shade of our temple.The Recent Srinarayana Peetha temple near Vellore worth crores is also the shade of our temple.There is a nice spacious space in front of the temple so worship can be done even in crowding.
The headquarters is located at a good height from the ground level so it can be viewed from anywhere.since the outer pragara has no wall it has natural light and air circulation in the progenitor of our clan deities.The swamis and pujas are clearly visible to everyone as it gives a grand display can be seen.
Twenty-four divisions in our Chettiar community by the names of clans. There are twenty-four inside the temple to represent the clans of all set up pillars and engrave the name of a clan on each pillar we have. In it we have brother and sister of the formal eight household clans In the eight pillars in the first circle of names, we have the uncle-brother relationship the names of the sixteen households in the formal are sixteen in the outer circle. The pillars are inlaid with aesthetic style. Anything else in that system. It is a special system that is not found in the temples of the deities.
Spatial history
The appearance of Sriranganathar lying on the facade of the temple and above the original facade. The origin of Kejalakshmi and the completeness of the temple are known to us as the Srirangamakkadavar clan. All wealth is available and theology is understood. The first deity is Ganesha, and Sri Anjaneyar is in a special place in Vaishnavism. Srivishnu Durga and Sri Kamatshi amman, the chief deity of the villages inhabited by the Chettiar community Sri paalayamman, who sits on the throne of Arava and bestows blessings on the people inside the stadium. The idols of Paapayaaman came to the temple in a fitting manner has an indelible place in the hearts of worshipers. We are proud of the people of Srirangam. It is a great privilege for us as a clan to have this temple.